Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வில் இருந்து மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட் ஆட வேண்டும் – யுவ்ராஜ் சிங்குக்கு வாரிய அதிகாரி கோரிக்கை!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (16:32 IST)
ஓய்வை அறிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் யுவ்ராஜ் சிங் மீண்டும் பஞ்சாப் அணிக்காக விளையாடவேண்டும் என பஞ்சாப் கிரிக்கெட் வாரிய அதிகாரி புனீத் பாலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. இந்நிலையில் ஓய்வுக்குப் பின் அவர் பல அதிரடி கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இதுகுறித்து ஞ்சாப் கிரிக்கெட் சங்க செயலர் புனீத் பாலி ‘உள்நாட்டுப்போட்டிகளிலாவது யுவ்ராஜ் சிங் மீண்டும் விளையாடவேண்டும். கடந்த 2 சீசன்களாக வீரர்கள் மற்ற மாநிலங்களுக்குச் சென்று விட்டனர். சண்டிகர், சத்திஸ்கர், இமாச்சல் என்று எங்கள் மாநில வீரர்கள் சென்று விடுகின்றனர். எனவே அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்க யுவ்ராஜ் சிங் வரவேண்டும். அவரிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

க்ளாஸை உடைச்சு பில்டப் பண்ணி வந்தது இதுக்குதானா? டக் அவுட் மூலம் ஹிட்மேன் செய்த புதிய சாதனை!

‘யாருப்பா நீ.. நல்லா பவுலிங் போட்ட’… தோனியே அழைத்துப் பாராட்டிய விக்னேஷ் புத்தூர்!

கண்ணா நீ அவுட்டு கெளம்பு! தோனியின் மின்னல் வேகம்! அதிர்ச்சியில் உறைந்த சூர்யகுமார் - வைரல் வீடியோ!

போடா அங்குட்டு.. மும்பை ப்ளேயரை பேட்டால் அடித்து விரட்டிய தோனி! - வைரலாகும் வீடியோ!

சிஎஸ்கே அடுத்த வெற்றியை பார்க்க வேண்டுமா? CSK - RCB போட்டிக்கான டிக்கெட் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments