Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2020… 29 வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியாத நிலை – ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (10:08 IST)
ஐபில் 2020 தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த 29 வீரர்கள் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தள்ளிப்போன ஐபிஎல் போட்டிகள் ஒருவழியாக செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்தது. ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் சற்றுமுன் அளித்த பேட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

இதற்காக எல்லா அணி வீரர்களும் தங்கள் வீரர்களை அமீரகத்துக்கு அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி முழுவதும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளைச் சேர்ந்த 29 வீரர்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

ஏனென்றால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்கும் தொடருக்காக ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளனர். ஐபிஎல் தொடரில் இரு நாட்டு வீரர்களும் முக்கிய பங்காற்றுவதால் இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments