இந்திய அணி தற்போது மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மூன்று கேப்டன்கள் இந்திய அணியைக் கடந்த சில மாதங்களாக வழிநடத்தி வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் ஷுப்மன் கில்லும், டி 20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவும் ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவும் வழிநடத்துகின்றனர்.
2027 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பைத் தொடர் வரவுள்ள நிலையில் புதிய இளம் இந்திய அணியைக் கட்டமைக்க பிசிசிஐ முயல்வதாக தெரிகிறது. அதனால் மூத்த வீரர்களான ரோஹித் மற்றும் கோலி ஆகியோரை ஓரம்கட்ட நினைப்பதாக சொல்லப்படுகிறது.
தற்போது 38 வயதாகும் ரோஹித் ஷர்மா அடுத்த உலகக் கோப்பையில் விளையாட விரும்பினாலும் அதற்கான சாத்தியங்கள் தெரியவில்லை. இந்நிலையில் ரோஹித் ஷர்மாவுக்கு ஒருநாள் போட்டிகளுக்குப் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமிக்க ஆலோசித்து வருவதாக தற்போது தகவல் பரவத் தொடங்கியுள்ளது. ரோஹித் ஷர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து மட்டும் நீக்கப்பட்டு வீரராக அணிக்குள் தொடர்வார் எனத் தெரிகிறது.