Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 அணிகள்.. ஒவ்வொரு அணிக்கும் 22 போட்டிகள்.. 2024 ஆம் ஆண்டின் புரோ கபடி தொடக்கம்..!

Advertiesment
12 அணிகள்.. ஒவ்வொரு அணிக்கும் 22 போட்டிகள்.. 2024 ஆம் ஆண்டின் புரோ கபடி தொடக்கம்..!

Siva

, வியாழன், 17 அக்டோபர் 2024 (16:30 IST)
11-வது புரோ கபடி லீக் போட்டி நாளை  ஹைதராபாத்தில் தொடங்குகிறது, இந்த போட்டிகள் டிசம்பர் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்போட்டியின் 2-வது கட்டம் நொய்டாவில், 3-வது கட்டம் புனேயில் நடைபெறும். டிசம்பர் 24-ஆம் தேதியுடன் லீக் சுற்றுகள் முடிவடைகின்றன. பிளே ஆப் சுற்று நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

புரோ கபடி லீக் 2024 சீசனில் புனேரி பல்தான், பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி, தமிழ் தலைவாஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், உ.பி. யோத்தாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் 22 ஆட்டங்களில் விளையாட வேண்டும், மேலும் புள்ளி பட்டியலில் முன்னணி 6 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

நாளை தொடங்கும் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8 மணி), தபாங் டெல்லி-யு மும்பா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. சென்னை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி நாளை மறுநாள் (அக்டோபர் 20) தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது, இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக சாகர் சாரதி மூன்றாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் 9-வது சீசனில் அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும், சச்சின் தன்வர் தமிழ் தலைவாஸ் அணியில் புதியதாக இணைந்துள்ளார். இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறல்.. சதத்தை நோக்கி கான்வே..!