உலக கோப்பை டி20 கிரிக்கெட் நடந்து வரும் நிலையில் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாவே அணி.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து அந்த அணி களத்தில் இறங்கிய 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியின் முகமது வாசிம் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அதேபோல் ஷதீப்கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பின்னர், 130 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஏற்கனவே இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த அணியில், ஷான் மாசூட் 44 ரன்களும், நவாஸ் 22 ரன்களும்,ஷதாப் கான் 17 ரன்களும் அடித்தனர். பெரிதும் எதிர்பார்த்த பாபர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன் கள் மட்டுமே எடுத்து தோற்றது. எனவே, ஜிம்பாவே 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி இன்னும் ஒரு புள்ளியை கூட எடுக்காத நிலையில் உள்ளது.
இந்நிலையில் ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் டம்புட்ஸோ மங்காக்வா தனது ட்விட்டர் பக்கத்தில், ஜிம்பாப்வேக்கு என்னவொரு வெற்றி! வீரர்களுக்கு வாழ்த்துகள். அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள் என்று பதிவிட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாக். பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பதிவில், எங்களிடம் மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் உண்மையான கிரிக்கெட் ஆர்வம் இருக்கிறது. மீண்டு வரும் பழக்கம் பாகிஸ்தானியர்களிடம் உண்டு. வாழ்த்துக்கள், இன்று உங்கள் அணி நன்றாக விளையாடியது என்று குறிப்பிட்டுள்ளார்.
Edited By: Sugapriya Prakash