Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விராட் கோலியின் அசத்தல் இணை: டி20 உலக கோப்பையில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா

Advertiesment
விராட் கோலியின் அசத்தல் இணை: டி20 உலக கோப்பையில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்தியா
, வியாழன், 27 அக்டோபர் 2022 (23:23 IST)
பாகிஸ்தானுக்கு எதிராக ஓர் மறக்க முடியாத ஆட்டத்தை விளையாடிய விராட் கோலி எனும் 'ரன் மெஷின்' இன்னமும் அதே ஃபார்மில் களமாடி வருவது ரசிகர்களை உற்சாகமூட்டியிருக்கிறது. டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளி 2ம் இடம் பிடித்துள்ளார் விராட் கோலி.

 
இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதிய டி20 உலக கோப்பை சூப்பர் 12 ஆட்டம் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. கே.எல்.ராகுல் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

 
ரோஹித் சர்மா 39 பந்துகளை எதிர்கொண்டு 53 ரன்கள் சேர்த்தார். குறிப்பாக இந்திய அணி முதல் 6 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 179 ரன்கள் சேர்த்தது. நெதர்லாந்து அணி 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
 
மீண்டும் மிரட்டிய விராட் கோலி
நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டம், ஒன் சைடட் கேமாக இருந்தாலும் கோலியின் நேர்த்தியான ஷாட்கள் வழக்கம்போல பார்ப்பதற்கு தரமாக இருந்தன.
 
விளம்பரம்
 
பாகிஸ்தானுடனான வெற்றிக்குப் பிறகு விராட் கோலியை நாடே கொண்டாடித் தீர்த்தது. இருந்த போதிலும் கிடைக்கும் நேரங்களிலெல்லாம் தனது பேட்டிங்கை கூர்தீட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் கோலி.
 
சக வீரர்கள் பயிற்சியை தொடங்குவதற்கு முன்னதாகவே களத்திற்கு வந்து குறிப்பிட்ட ஷாட்களை மட்டும் பயிற்சி செய்வதாக சில முன்னணி விளையாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் - நீங்கள் அறிய வேண்டிய தகவல்கள்.
கிரிக்கெட்டில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம் - சம வருவாய் கிடைக்குமா?
இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை ஆட்டம் பற்றி சுந்தர் பிச்சை ட்விட்டர் பதிவு
நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 44 பந்துகளில் கோலி 2 சிக்சர்களையும் 3 பவுண்டரிகளை விளாசியிருந்தார். தொடர்ந்து 2வது முறையாக அரைசதத்தையும் பதிவு செய்திருக்கிறார். இதேபோன்றுதான் 2016 டி20 உலகக்கோப்பை ஓர் சிறந்த தொடராக கோலிக்கு அமைந்தது.

 
கோலியின் பலத்தால் கோப்பை வெல்லுமா இந்தியா?
 
5 போட்டிகளில் விளையாடி 273 ரன்கள் சேர்த்து 2016 டி20 தொடரில் அதிகபட்ச ரன்களை குவித்த 2வது வீரராக ஜொலித்தார். அந்த ஆண்டு இந்தியா அரையிறுதி வரை சென்று வெஸ்ட் இண்டீசிடம் தோல்வியைத் தழுவியது.

 
நடப்பு தொடரில் அடுத்தடுத்து 2 முறை அரைசதம் விளாசி பலமிக்க வீரராக கோலி உருவெடுத்திருப்பது இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை மீண்டும் வெல்வதற்கான மற்றுமொரு வாய்ப்பாகவே கருதப்படுகிறது.

 
கேப்டன்ஸியில் இருந்து விலகியது, ஒரு மாத காலம் பேட்டை தொடாமல் இருந்தது, மன ரீதியான அழுத்தம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்த விராட் கோலி, இன்று தனது பேட்டால் வசைகளுக்கு பதிலடி கொடுத்து, இலக்கில் குறியாக செயல்படுகிறார். விராட் கோலி நிச்சயம் எதிரணிகளுக்கு ஆபத்தான வீரராகவே நடப்பு தொடரில் வலம் வருவார்.

 
குறைவான ரன்களை எடுத்த இந்தியா
இதுதவிர, இன்றைய ஆட்டத்தில் விராட் கோலியின் ரன் சேர்க்கும் வேகம் சற்று குறைவு என்றாலும் மறுமுனையில் சூர்யகுமாருடன் இணைந்து ஆடியது எதிரணியின் பந்துவீச்சை சிதறடிக்க உதவியது.

 
கோலி சில பந்துகளை சிங்கிள் தட்டி சூர்யகுமாருக்கு ஸ்டிரைக் வழங்க, அவர் தனது சிக்னேசர் ஷாட்களை ஆடி பொளந்து கட்டினார். வெறும் 25 பந்துகளில் 51 ரன்களை அடித்து மிரட்டியிருந்தார் சூர்யகுமார். முன்னதாக ரோஹித் சர்மாவும் 39 பந்துகளை எதிர்கொண்டு 53 ரன்களை விளாசினார்.

 
இருந்தபோதிலும் தான் ஆடிய விதத்தில் மகிழ்ச்சியில்லை என அவர் ஒப்புக்கொண்டுள்ளார். களம் எப்படி இருந்தாலும் ரன்களை நாம் குவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

 
டி20 வரலாற்றில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து குறைந்த ரன்களை இந்திய அணி சேர்த்தது இதுவே முதல்முறை.
 
 
இந்திய அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி கண்டு புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. தென்னாப்பிரிக்கா 3 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. இந்தியா இனி வங்கதேசம், ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் போட்டிகள் உள்ளன. இதில் பெரும்பாலான ஆட்டங்கள் இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தரும் என்பதால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரப்பர் தோட்டத்தில் பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு