Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தைக்கு பெயரிட்டு.....முதல் கார் வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்

Advertiesment
குழந்தைக்கு  பெயரிட்டு.....முதல் கார் வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்
, திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (23:24 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது தெரிந்ததே. இதையடுத்து இவர்களது திருமணம் ஓரிரு மாதங்களில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் திருமணம் தள்ளிப் போனது.

திருமணம் தள்ளிப் போனாலும் நடாஷா கர்ப்பம் ஆனதாக ஹர்திக் பாண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் கர்ப்பிணியாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவ்வப்போது அவர் பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த ஜூலை 30ம் தேதி ஹர்திக் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஆகான்ஷா மருத்துவமனைக்கு சிறப்பு நன்றி என கூறி மனைவிக்கு பிரசவம் பார்த்த டாக்டர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு " என் குழந்தையை இந்த உலகத்திற்கு காட்டிய மருத்துவர்களுக்கு நன்றி. என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பான்” என மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஹர்த்திக் பாண்டியா – நடாஸா தம்பதியர் தங்களது குழந்தைக்கு அகஸ்ட்யா எனப் பெயரிட்டுள்ளனர். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அகஸ்ட்யாவின் முதல் விளையாட்டுக் கார் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனிக்காக அவரது ரசிகர்கள் விடுத்த கோரிக்கை ... ஏற்குமா பிசிசிஐ