Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடுவானில் பிறந்த குழந்தைக்கு 'ஸ்கை' என பெயரிட்ட பெற்றோர்: பரபரப்பு தகவல்

Advertiesment
நடுவானில் பிறந்த குழந்தைக்கு 'ஸ்கை' என பெயரிட்ட பெற்றோர்: பரபரப்பு தகவல்
, வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (19:41 IST)
அமெரிக்காவில் நடுவானில் விமானத்தில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு ஸ்கை என அந்த குழந்தையின் பெற்றோர் பெயர் வைத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்த கிறிஸ்டல் கிக் என்ற பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது விமானத்தில் தனது உறவினர் ஒருவரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார். 8 மாத கர்ப்பிணி என்பதால் அவர் விமான பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார் 
 
ஆனால் பயணத்தின் நடுவே திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் ஒருவரின் உதவியால் அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது என்றும், இதனை அடுத்து தாயும் சேயும் பத்திரமாக இருப்பதாகவும் விமானம் தரை இறங்கியவுடன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் விமானத்தின் பிறந்த தனது மகனுக்கு ஸ்கை என்று பெயர் வைத்துள்ளார் கிறிஸ்டல்கிக். இந்த பெயர் தற்போது அமெரிக்க சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூடானில் முதல்முறையாக ஊரடங்கு: பொதுமக்கள் அதிர்ச்சி