Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாராவது ஒருவர் தோற்றுத்தானே ஆகவேண்டும் – தோல்விக்குப் பின் தோனி !

Advertiesment
யாராவது ஒருவர் தோற்றுத்தானே ஆகவேண்டும் – தோல்விக்குப் பின் தோனி !
, புதன், 8 மே 2019 (08:58 IST)
சென்னை அணியை இந்த சீசனில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று மும்பை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 12 ஆவது சீசன் இப்போது நடந்து வருகிறது. எட்டியுள்ளது. லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு இடையிலான குவாலிஃபயர் போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த சீசனில் 2 லீக் போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி கண்டிருந்த சென்னை அணி அதற்குப் பழிதீர்த்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாக மீண்டும் தோல்வி அடைந்துள்ளது. ஐபிஎல்-ல் உள்ள எல்லா அணிகளையும் அனாயசமாகப் பந்தாடும் சென்னை அணி மும்பையிடம் மட்டும் பம்முகிறது.

இந்நிலையில் தோனி தோல்விக்கானக் காரணம் பற்றி பேசியுள்ளார். அதில் ‘ போட்டியில் யாராவது ஒருவர் தோற்றுதானே ஆகவேண்டும். இப்போது இறுதிப்போட்டிக்கு சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். பிட்ச்சை சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருந்து விட்டோம். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிலப் போட்டிகளில் விளையாடுகிறார்கள். சிலப் போட்டிகளில் சொதப்புகிறார்கள். அனுபவத்துக்கு ஏற்றவாறு ஆட வேண்டும். சில கேட்ச்களை விட்டோம். ஸ்பின்னர்கள் இன்னும் சிறப்பாக பேட்ஸ்மேனுக்கு வெளியில் பந்துகளை வீசியிருக்க வேண்டும். நல்ல தொடக்கம் இருந்தும் அதைத் தக்கவைக்காமல் விட்டுவிட்டோம். முதல் 2 இடத்தில் இருந்ததால் எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

சென்னை மே 10 ஆம் தேதி இன்றைய எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெரும் அணியோடு மோத இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்த மும்பை!