குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்த மும்பை.. 229 ரன்கள் இலக்கு..!

Siva
வெள்ளி, 30 மே 2025 (21:47 IST)
ஐபிஎல் தொடரில் இன்று மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி மிக அபாரமாக பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்த நிலையில், அந்த அணி கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிடும் என்றே கூறப்பட்டு வருகிறது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் அடித்தார். அவர் 9 நான்கு, சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடைசி நேரத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 22 ரன்கள் அடித்தார் என்பதும், அதில் மூன்று சிக்ஸர்கள் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா தலா 33 மற்றும் 25 ரன்கள் அடித்தனர்.
 
இந்த நிலையில், 229 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் அணி விளையாடி வரும் நிலையில், முதல் ஓவரிலேயே கேப்டன் சுப்மன் கில் ஒரு ரன்னில் அவுட் ஆனார். தற்போது சாய் சுதர்சன் மற்றும் மெண்டிஸ் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.. மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி.. விராத் டக் அவுட்.. ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்..!

ஆப்கானிஸ்தானுக்கு பதில் எந்த நாடு? முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இணைந்த அணி இதுவா?

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments