Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய வீரர்களிடம் இருந்து பாடம் கற்று கொள்ளுங்கள்: மைக்கேல் கிளார்க் அட்வைஸ்

india won1
, செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (13:41 IST)
இந்திய வீரர்களிடமிருந்து ஆஸ்திரேலியா வீரர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் அட்வைஸ் செய்துள்ளார்.
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
இந்த நிலையில் ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலியா அணி பங்கேற்காதது மிகப்பெரிய தவறு என்றும் சூழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்திய வீரர்களிடமிருந்து ஆஸ்திரேலியா வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் அட்வைஸ் செய்துள்ளார். 
 
இந்தியாவின் பேட்டிங்கை ஆஸ்திரேலியா வீரர்கள் பார்க்காதது போன்றே உள்ளது என்றும் இனிவரும் போட்டிகளிலாவது கவனமுடன் விளையாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அணிக்குள் திரும்பும் இரண்டு முக்கிய வீரர்கள்… ஆஸி அணிக்கு திருப்புமுனையாக அமையுமா?