Publish Date: Tue, 21 Feb 2023 (08:30 IST)
Updated Date: Tue, 21 Feb 2023 (08:37 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஹேசில்வுட் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று, பரிதாபகரமான நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால்தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும்.
இந்நிலையில் ஆஸி. அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக சிட்னிக்கு புறப்பட்டுள்ளார். அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்குள் இந்தியா திரும்பிவிடுவார் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் தொடரில் இருந்து முழுவதும் காயம் காரணமாக விலக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.