Publish Date: Tue, 21 Feb 2023 (09:37 IST)
Updated Date: Tue, 21 Feb 2023 (09:38 IST)
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய அணி.
இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று, பரிதாபகரமான நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால்தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும்.
இந்நிலையில் காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் ஆகிய இருவரும் மூன்றாவது டெஸ்ட்டுக்கு உடல் தகுதியோடு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இவர்கள் இருவரும் அணிக்குள் இடம்பெறுவார்கள் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் ஹேசில்வுட் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.