Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இண்டர் மியாமி அணிக்காக களமிறங்கிய அறிமுக போட்டியில் மெஸ்ஸி அசத்தல் கோல்!

Advertiesment
messi foot ball
, சனி, 22 ஜூலை 2023 (21:07 IST)
அமெரிக்காவின் இண்டர் மியாமி கால்பந்தாட்ட அணியில் உலகப் பிரசித்தி பெற்ற வீரர் மெஸ்ஸி இணைந்திருந்தார்.  இந்த அறிவிப்பை சமீபத்தில், இண்டர் மியாமி அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பார்சிலோனா அணியில் இருந்து விலகி,   நெய்மர் விளையாடி வரும் பிஎஸ்ஜி அணியில் மெஸ்ஸி விளையாடி வந்த  நிலையில், அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் அணியான மியாமி அணியில் இணைந்துள்ளார்.

இவர், வரும் 2025 ஆண்டு வரை இந்த அணிக்காக விளையாட உள்ள நிலையில் இவருக்கு ரூ.429 கோடி ஊதியம் கொடுத்து அணியில் இணைத்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  இண்டர் மியாமி கிளப் அணிக்காக களமிறங்கிய அறிமுக போட்டியில், குரூஸ் அசுல் அணிக்கு எதிராக  கடைசி நிமிடத்தில் மெஸ்ஸி, பிரீ கிக்கில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இப்போட்டியில் இண்டர் மியாமி அணி 2-1 என்ற கணக்கில் குரூஸ் அசுல் அணியை வீழ்த்தியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஷஷ் தொடரின் 4வது டெஸ்ட்.. இன்னிங்ஸ் வெற்றி பெறுமா இங்கிலாந்து?