இன்றைய நவீன மற்றும் இணையதள உலகில் தொழில் நுட்பம் என்பது அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
இன்றுள்ள குழந்தைகள் முதற்கொண்டு முதியோர் வரை பலரிடமும் ஸ்மார்ட் போன் பயன்பாடு இல்லாமல் இருப்பதில்லை. அதேசயம், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களிலும் மூழ்கிக் கிடக்கின்றனர்.
இந்த நிலையில், அதிகளவில் ஸ்மார்ட் போனுக்கு அடிக்ட் ஆகியுள்ள நாடுகளின் பட்டியலை World of Statistics வெளியிட்டுள்ளது.
அதில், 1. சீனா, 2.சவூதி அரேபியா, 3. மலேசியா. 4.பிரேசில், 5.தென்கொரியா,6. கனடா, 7.துருக்கி, 8.எகிப்து,9. நேபாள், 10.இத்தாலி ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன.
இப்பட்டியலில், இங்கிலாந்து 16 வது இடத்திலும், இந்தியா 17 வது இடத்திலும், இங்கிலாந்து 18 வது இடத்திலும் ஜெர்மனி 24 வது இடத்திலும் உள்ளன.