Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே எல் ராகுலிடம் மன்னிப்புக் கேட்டேன் – மேக்ஸ்வெல் பதில்!

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (19:44 IST)
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடததற்கு கே எல் ராகுலிடம் மன்னிப்புக் கேட்டுள்ளதாக க்ளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரை மோசமாக தொடங்கிய அணியான  கிங்ஸ் லெவன் பஞ்சாப் இரண்டாவது பாதியில் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப்க்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி இரண்டு போட்டிகளை தோற்றதால் பிளே ஆஃப் கனவு உண்மையிலேயே கனவானது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு அணியை மெருகேற்றும் விதமாக அந்த அணியில் இருந்து மோசமாக விளையாடிய காட்ரெல் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகிய இருவரையும் கழட்டிவிட போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடினார். இது பஞ்சாப் ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

இது தொடர்பாக ரசிகர்கள் மேக்ஸ்வெல்லைக் கேலியாக பேச அது குறித்து பேசிய மேக்ஸ்வெல் ‘ நான் அதற்காக கே எல் ராகுலிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments