உலக நாடுகளின் கிரிக்கெட்டை ஐபிஎல் நாசம் செய்கிறது என இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான டேவிட் லாயிட் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
ஐபிஎல் தொடருக்கு எச்சரிக்கை மணிகள் ஒலிக்கப்பட வேண்டும். ஏற்கனவே, வங்கதேசத்திற்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட்களுக்கு தென்னாப்பிரிக்காவின் முழு பவுலர்கள் இல்லை. மேலும் நியூசிலாந்து-நெதர்லாந்து தொடரில் நியூசிலாந்தின் 12 வீரர் தேர்வில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் பாரம்பரிய சர்வதேச கிரிக்கெட்டை சீர்குலைக்கிறது.
மேலும் 2 அணிகளைச் சேர்த்து கிரிக்கெட் ஏகாதிபத்தியத்தை பிசிசிஐ அரங்கேற்றி வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் ஐபிஎல் மட்டுமே ஒரே தொடராக வேறு வேறு நாடுகளிலும் தொடங்கப்படலாம். பணமழை, கிரிக்கெட்டின் எதிர்காலத்தையும் கிரிக்கெட் நுணுக்கங்களையு வீரர்களின் நாட்டுப்பற்றையும் சிதைத்து விடுகிறது என்று கூறியுள்ளார்.