ஐபிஎல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பேட்ஸ்மேன் ரிங்குசிங், சமாஜ்வாதி ஜனதா கட்சி எம்எல்ஏ மகளை திருமணம் செய்யப்போவதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ துஃபானி என்பவரின் மகள் ப்ரியா சரோஜ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக ரிங்குசிங் காதலித்து வருவதாகவும், இருவரும் தங்கள் பெற்றோரிடம் திருமணம் செய்ய அனுமதி கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதை அடுத்து, இரு தரப்பு பெற்றோரும் இந்த திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், ரிங்குசிங் - ப்ரியா சரோஜ் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறப்பட்டாலும், இதனை பெற்றோர்கள் மறுத்துள்ளனர். விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும், திருமண தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து, ரிங்குசிங் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் ஒரு முக்கிய பேட்ஸ்மேனாக ரிங்குசிங் விளையாடி வருகிறார் என்பதும், இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் 14 போட்டிகளில் 206 ரன்கள் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் டி20 அணியிலும் ரிங்குசிங் உள்ளார் என்பதும், அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.