Publish Date: Wed, 01 Sep 2021 (15:49 IST)
Updated Date: Wed, 01 Sep 2021 (16:30 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி அடுத்த டெஸ்ட் போட்டியில் கண்டிப்பாக இந்திய அணியில் மாற்றம் நடக்கும் எனக் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளைப் பெற்று தொடர் சமனில் உள்ளது. இதனால் நாளை தொடங்கும் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய அணியில் நாளைக் கண்டிப்பாக அஸ்வின் களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் ஜடேஜா, இஷாந்த் ஷர்மா மற்றும் ரஹானே ஆகியோரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் அஷ்வின், ஷர்துல் தாக்கூர் மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் சேர்க்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அணியில் மாற்றம் இருக்குமா எனக் கேப்டன் கோலியிடம் கேட்டபோது கண்டிப்பாக நடக்கும். அதுதான் லாஜிக்கானது எனக் கூறியுள்ளார்.