ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி சரிவில் இருந்து இந்திய அணியை மீட்டெடுக்க மிகவும் உதவியாய் இருந்தார்.
இந்த போட்டியில் பாண்டியா 83 ரன்கள் எடுத்தார். அதே போல் இந்திய அணி பவுலிங் செய்யும் போதும், பாண்டியா 4 ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில் இந்திய அணி கேப்டன் கோலி, பாண்டியாவை புகழ்ந்து பேசியுள்ளார். கோலி கூறியதாவது, இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கிடைத்தது பெரிய பாக்கியம்.
அவரின் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். அவரின் திறமையும், செயல்பாடும் நம் அணிக்கு உறுதுணையாகவுள்ளது.
தோனியுடன் விளையாடியதால் பாண்டியாவுக்கு அழுத்தம் இருந்திருக்காது. வருங்காலத்தில் யுவராஜ் சிங் போன்று ஆல்ரவுண்டராக திகழ்வார் என குறிப்பிட்டுள்ளார்.