Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பலகோடி மதிப்பிலான விளம்பரத்தை உதறிய கோலி: காரணம் என்ன??

Advertiesment
பலகோடி மதிப்பிலான விளம்பரத்தை உதறிய கோலி: காரணம் என்ன??
, வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (14:05 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது கிரிக்கெட் பயணத்தில் தொடர் வெற்றியை கண்டு வருகிறார். 


 
 
கிரிக்கெட்டை தவிர்த்து எம்.ஆர்.எஃப். டயர்ஸ், பூஸ்ட், பூமா ஸ்போர்ட்ஸ் கியர், ஆடி, பெப்சி உள்பட பல விளம்பரங்களில் நடித்து வருகிறார். 
 
இதன் மூலம் பல கோடிகளை சம்பாதிக்கிறார். இந்நிலையில் கோலியை ஒப்பந்தம் செய்ய வந்த ஒரு விளம்பர நிறுவனத்தை அவர் உதறிதள்ளியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
பலகோடி வருமானம் வரக்கூடிய குளிர்பான நிறுவன விளம்பரத்தில் நடிக்க கோலி மறுத்துவிட்டராம். இதற்கான காரணத்தையும் கோலி தெரிவித்துள்ளார்.
 
அவர் கூறியதாவது, கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்பதற்காக நான் உட்கொள்ளாத பொருளை மற்றவர்கள் உட்கொள்ள வற்புறுத்தமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 ஆண்டுகளுக்கு பிறகு பாரீஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக்