Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பந்துவீசும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த கிரிக்கெட் வீரர்

Advertiesment
பந்துவீசும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த கிரிக்கெட் வீரர்
, ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (21:48 IST)
கேரளாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் பந்துவீச ஆயத்தமானபோது திடீரென மயங்கி விழுந்த பெளலர் மைதானத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா கிரிக்கெட் சங்கம் சார்பாக உள்ளுர் போட்டி ஒன்று நடைபெற்றது. இந்த போட்டியில் காசர்கோட்டை சேர்ந்த பத்மநாப் என்ற வீரர் பந்து வீச ஆயத்தமாகி வந்தார். பந்து வீச எல்லையில் இருந்து ஓடி வந்த போது திடீரென பாதி வழியில் அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதனை மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர். அவர் மைதானத்திலேயே உயிரை இழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவத்தால் கேரள கிரிக்கெட் சங்கம் அதிர்ச்சியில் உள்ளது.

இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோகித் தலைமையில் தொடரை வென்ற இந்தியா