Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்ரிடி ஹாட்ரிக்; சேவக் டக்அவுட்: T10 கிரிக்கெட் லீக் சுவாரஸ்யம்!!

அப்ரிடி ஹாட்ரிக்; சேவக் டக்அவுட்: T10 கிரிக்கெட் லீக் சுவாரஸ்யம்!!
, வெள்ளி, 15 டிசம்பர் 2017 (19:40 IST)
டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் வரிசையில் தற்போது 10 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் துவங்கியுள்ளது. நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. 
 
மரதா அரேபியன்ஸ், கேரளா கிங்ஸ், பாக்டூன்ஸ், பஞ்சாபி லிஜென்ட்ஸ், டீம் ஸ்ரீலங்கா, பெங்கால் டைகர்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் கேரள மற்றும் பெங்கால் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி, 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் விளையாடிய கேரள அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 90 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
 
இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் ஷாகித் அப்ரிடி தலைமையிலான பாக்டூன்ஸ் அணியும், சேவாக் தலைமையிலான மரதா அரேபியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் பாக்டூன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மரதா அணியின் கேப்டன் சேவாக் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.
 
இந்த போட்டியில், 5 வது ஓவரை ஷாகித் அப்ரிடி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரசொவ் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வெயின் பிராவோ, சேவாக் அடுத்தடுத்து எல்பிடபிள்யூ ஆனார்கள். இதனால் அப்ரிடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனுஷ்கா சர்மாவின் சொத்து மதிப்பு இவ்வளவா... கோலி எவ்வளவு கொடுத்தார் தெரியுமா???