நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர் சி பி அணிக்காக முதல் முறையாகக் களமிறங்கி விளையாடிய ஜிதேஷ் ஷர்மா அந்த அணிக் கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்காற்றினார். சில போட்டிகளில் அந்த அணிக்குக் கேப்டனாகவும் செயல்பட்டார்.
அதையடுத்து அவருக்கு ஆசியக் கோப்பைத் தொடரில் இடம் கிடைத்தது. ஆனாலும் அவர் பிளேயிங் லெவனில் ஆடாமல் பேக்கப் வீரராகவே வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கைப் பற்றி பேசியுள்ள அவர் “நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த போது யுடியூப் பார்த்துதான் பயிற்சிகளை மேற்கொண்டேன். யுடியூப்தான் எனது முதல் கோச். சிறு வயதில் இருந்தே ரோஹித் ஷர்மாவின் பேட்டிங்கைதான் அதிகமாக யுடியூபில் பார்ப்பேன்” எனக் கூறியுள்ளார்.