ஜியோஸ்டார் மற்றும் சோனி பிக்சர்ஸ் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு கூட்டணியாக உரிமை பெற்றுள்ளது.
ஜியோஸ்டார் மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா இணைந்து, இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் திட்டத்தை உருவாக்கியுள்ளன. ஜியோ ஹாட்ஸ்டார் இந்தியாவின் இங்கிலாந்து பயணத்திலான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை நேரலையாக ஸ்ட்ரீம் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் உள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் ஜியோ ஹாட்ஸ்டாரில் மட்டும் டிஜிட்டல் பிளாட்பார்மில் நேரலையாக ஒளிபரப்பப்படும். அதேசமயம், தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பும்.
ஜியோ ஸ்டார் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கும் சிஇஓ சஞ்சோக் குப்தா கூறுகையில், “இந்த ஒளிபரப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வெற்றி. ஜியோ ஹாட்ஸ்டாரின் டிஜிட்டல் வரம்பு மற்றும் சோனியின் ஒளிபரப்பு வலையமைப்பு இணைந்து, இங்கிலாந்து தொடரை அனைவரும் எளிதாக பார்க்கும் வாய்ப்பை உருவாக்கும். நாங்கள் ரசிகர்களுக்கு இன்னமும் ஈர்க்கக்கூடிய சிறந்த அனுபவத்தை வழங்குவோம் என்று கூறினார்.
சோனி பிக்சர்ஸ் இந்தியா நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ கவுரவ் பானர்ஜீ கூறுகையில், “இந்த புதிய கூட்டணி கிரிக்கெட் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவுக்கும் நன்றி” என்றார்.
இந்தியா - இங்கிலாந்து தொடரின் ஐந்து டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்தில் ஜூன் 20ல் லீட்ஸ் நகரத்தில் தொடங்கும். ஜூலை 2, ஜூலை 10, ஜூலை 23 மற்றும் ஜூலை 31ல் அடுத்த 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறும்.
முன்னதாக ஜூன் 13 முதல் 16 வரை, இந்தியா A அணியுடன் இந்தியா ஒரு பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்கவுள்ளது.