Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் படிப்புக்கு காசு குடுங்க.. உங்க வெப்சைட்டை தரேன்! JioHotstar ஐ வாங்கி வைத்துக் கொண்டு டீல் பேசும் நபர்!

Advertiesment
Jio Hotstar

Prasanth Karthick

, வியாழன், 24 அக்டோபர் 2024 (12:29 IST)

ஜியோவும் ஹாட்ஸ்டாரும் இணைய உள்ள நிலையில் JioHotstar என்ற டொமெய்னை வாங்கிய டெவலப்பர் ஒருவர் தனது படிப்புக்கு செலவு செய்தால் அதை தருவதாக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் டீல் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்தியாவில் பிரபலமாக உள்ள டெலிகாம் நெட்வொர்க் நிறுவனங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ முன்னணியில் உள்ளது. ஜியோ நிறுவனம் Jio Cinemas, Music, Jio TV என பல பொழுதுபோக்கு செயலிகளிலும் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமை, HBO Max வெப் தொடர்களின் ஒளிபரப்பு உரிமை போன்றவற்றை ஜியோ சினிமாஸ் வாங்கிய நிலையில் அதன் பயனாளர்கள் அதிகரித்துள்ளனர்.

 

அதேசமயம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை போன்றவற்றை இழந்ததால் மக்களிடையே பிரபலமாக இருந்த ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. டிஸ்னி நிறுவனமும் தற்போது இந்தியாவில் ஒளிபரப்பு சார்ந்த முதலீடுகளில் ரிலையன்ஸுடன் இணைந்து விட்டதால் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் ஜியோவுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஜியோவுடன் ஹாட்ஸ்டார் இணைந்து JioHotstar என்ற தளமாக மாற உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் JioHotstar.com என்ற வலைதளத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு முன்பே டெல்லியை சேர்ந்த இணைய டெவலப்பர் ஒருவர் வாங்கி விட்டார். அந்த தளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்ட அந்த டெவலப்பர் தனது படிப்பு செலவுகளுக்காக 93,345 யூரோ பண உதவி செய்தால், இந்த தளத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

webdunia
 

ஆனால் அவரது இந்த வேண்டுகோளை ரிலையன்ஸ் நிறுவனம் நிராகரித்துவிட்டதாகவும், அவர்மேல் சட்டரீதியான நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த வலைதளத்தில் அவர் வெளியிட்ட அந்த அறிவிப்பு தற்போது வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுடன் மோதல்.. கனடா பிரதமர் பதவி விலக சொந்த கட்சி எம்பிக்கள் கெடு..!