Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த ஆண்டு ஐபில் இந்தியாவில் இல்லையா?

Advertiesment
துபாயில் ஐபிஎல் போட்டி | ஐபிஎல் 2019 | loksabha elections 2019 | ipl in dubai | ipl 2019 | cwc 2019
, வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (13:13 IST)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் போட்டிகள் என்றால் அது மிகையில்லை. சுமார் இரண்டு மாத காலம் நடைபெறும் இந்த போட்டிகளை கோடிக்கணக்கான மக்கள் நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு அதாவது 2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறாது என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் 12வது ஐபிஎல் தொடர் போட்டிகளை மார்ச் 29, முதல் மே 19, வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் வேறு நாட்டில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே கடந்த 2009ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தபோது தென்னாப்பிரிக்கா மற்று துபாயில் ஐபிஎல் போட்டிகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அடுத்த ஆண்டும் துபாயில் இந்த போட்டி நடைபெற வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. 
 
webdunia
இதுகுறித்து  பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியபோது, நாங்கள் எந்தவொரு சூழலுக்கும் தயாராக உள்ளோம். தேர்தல் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டால், போட்டிகள் துபாய்க்கு மாற்றப்படும். துபாயின் நேரம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றதாக இருக்கும். எனவே துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மைதானங்களில் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மினி உலக கோப்பை போட்டி ரத்து: ஐசிசி அதிரடி!