Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்: ஐசிசி நம்பிக்கை

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்: ஐசிசி நம்பிக்கை
, வியாழன், 26 ஏப்ரல் 2018 (22:25 IST)
ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், வரும் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறும் என்றும் ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது
 
கொல்வத்தாவில் இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 5 நாள் நிர்வாக ரீதியிலான கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி டேவ் ரிச்சார்ட்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டை சேர்ப்பது மற்றும் கிரிக்கெட் போட்டியை உலகமயமாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
 
webdunia
ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இணைக்க வேண்டும் என்று சrவதேச கிரிக்கெட் வாரியம் தீவிர முயற்சிகள் எடுத்து வருவதாகவும், அதற்கான பணியில் துரிதமாக இறங்கி உள்ளதாகவும் டேவ் ரிச்சார்ட்சன் தெரிவித்தார்.
 
மேலும் எங்களுடைய முயற்சிகள் சரியான பாதையில் பயணித்தால் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் கிரிக்கெட் இடம்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஞ்சாப் அணிக்கு ஐதராபாத் கொடுத்த இலக்கு 133 ரன்கள்