Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 18 April 2025
webdunia

கொல்கத்தா பந்துவீச்சை அடித்து நொறுக்கும் டேவிட் வார்னர் - ரிஷப் பண்ட்!

Advertiesment
delhi
, ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (16:27 IST)
டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 19வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது
 
இதனை அடுத்து டெல்லி அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி அபாரமாக விளையாடி 29 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அதன்பின் டேவிட் வார்னர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கி வருகின்றனர்
 
சற்றுமுன் டெல்லி அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணி தற்போது புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஓரிரு இடங்கள் முன்னேறும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெஹா ஏலத்துக்கு பிறகு சொதப்பும் மும்பை இந்தியன்ஸ்…. மோசமான புள்ளிவிவரம்!