Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெஹா ஏலத்துக்கு பிறகு சொதப்பும் மும்பை இந்தியன்ஸ்…. மோசமான புள்ளிவிவரம்!

Advertiesment
மெஹா ஏலத்துக்கு பிறகு சொதப்பும் மும்பை இந்தியன்ஸ்…. மோசமான புள்ளிவிவரம்!
, ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (16:15 IST)
மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்ற அணியாக உள்ளது.

ஐபிஎல் தொடரின் பலமிக்க அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் பல மாறுதல்களை மேற்கொண்டது. அதையடுத்து தற்போது இந்த சீசனில் ஆடிய நான்கு போட்டிகளையும் வரிசையாக தோற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. இந்த முறை மட்டுமல்ல எப்போதெல்லாம் மெஹா ஏலத்தில் புதிய வீரர்களை தேர்வு செய்கிறதோ அந்த சீசனில் எல்லாம் மோசமான் தொடக்கத்தையே மும்பை இந்தியன்ஸ் கொண்டுள்ளது.

ஐபிஎல் தொடங்கிய 2008 ஆம் ஆண்டில் முதல் நான்கு போட்டிகளை இழந்தது. இதுபோல 2014, 2015, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஏலத்துக்குப் பிறகு புதிய வீரர்களோடு களமிறங்கிய மோசமான தொடக்கத்தோடு விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகளில் தோற்று 2015 ஆம் ஆண்டு இறுதியில் சாம்பியனானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ரன்னை வெச்சுட்டு ஒன்னும் பண்ண முடியாது! – தவறை ஏற்றுக்கொண்ட ரோகித் சர்மா