Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அசத்தும் இந்திய பவுலிங் – உலகக்கோப்பை சாத்தியமே…

அசத்தும் இந்திய பவுலிங் – உலகக்கோப்பை சாத்தியமே…
, திங்கள், 4 பிப்ரவரி 2019 (12:09 IST)
உலகக் கோப்பை நெருங்கி வரும் வேளையில் இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இருப்பதால் இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பைப் போட்டிகளை வெல்வதற்கான வாய்ப்பு இந்திய அணிக்குப் பிரகாசமாகி உள்ளது.

நியுசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 4- 1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிலும் தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு கேப்டன் கோஹ்லி, தவான், ரோஹித் மற்றும் தோனி உள்ளிட்ட சில பவுலர்கள் எப்படிக் காரண்மோ அதேப் போல இந்திய பவுலர்களான புவனேஷ்வர்குமார், பூம்ரா, ஷமி, சஹால், குல்தீப் யாதவ் ஆகியோரும் முக்கியக்காரணமாகும்.

சமீபத்தில் நடந்த நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா நிர்ணயித்த இலக்கு 253 ரன்களே. 20 ஓவர் போட்டிகள் வந்த பிறகு 252 ரன்களைத் துரத்துவது என்பது மிகவும் லகுவானக் காரியமாகியுள்ள சூழ்நிலையில் இந்தியா அந்த ஸ்கோரை டிபண்ட் செய்து 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதுவும் நியுசிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே…
webdunia

கடந்த சில மாதங்களாகவே இங்திய அணியின் வெற்றிக்கு இந்திய சுழற்பந்து கூட்டணியான குல்தீப் மற்றும் சஹால் ஆகியோர் பெருமளவில் பங்களித்து வருகின்றனர். இருவரும் சராசரியாக போட்டிக்கு 2 விக்கெட்கள் வீதம் கைப்பற்றி அசத்தி வருகின்றனர். அதேப் போல பூம்ராவும் கடைசிக் கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். மேலும் புவனேஷ்வர்குமார் மற்றும் ஷமியும் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார்.

மேலும் பாண்ட்யா, ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இவர்கள் இல்லாமல் கேதார் ஜாதவ்வையும் மாற்று பந்துவீச்சாளராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் இந்திய அணியின் பவுலிங் உச்சகட்ட ஃபார்ம்மில் உள்ளது. இதனால் இன்னும் 3 மாதங்களில் உலகக் கோப்பை போட்டிகள் நடக்க இருப்பதால் இந்திய அணியின் பந்துவீச்சுப் பலமடைந்து வருவது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்தக் காரணத்திலாயே இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வெல்ல அதிகளவில் வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னா கேப்டன் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டாவது டெஸ்ட்டிலும் இங்கிலாந்து தோல்வி – தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் !