Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நியூசிலாந்தை பழி தீர்க்குமா இந்திய அணி ....நாளை 5 வது ஒருநாள் போட்டி

நியூசிலாந்தை பழி தீர்க்குமா இந்திய அணி ....நாளை 5 வது ஒருநாள் போட்டி
, சனி, 2 பிப்ரவரி 2019 (16:04 IST)
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணுகளுக்கிடையேயான  5 ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி இருந்த  நிலையில் 4 வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தவே 93 ரன்னில் ஆல் அவுட் ஆகியது. அதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி மிக  எளிதாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் நாளை 5 வது மற்று  இறுதி ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
நாளை நடைபெறவிருக்கிற 5 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
நாளை வெல்லிங்டனில்  நடைபெறவுள்ள ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்கு தொடங்குகிறது.ஸ்டார் ஸ்போர்ட் சேனலில் இந்த போட்டி ஒளிப்பரப்பாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா