Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி வந்ததுமே கண் எறியுது! – ஆதங்கத்தை கொட்டிய கேப்டன்!

டெல்லி வந்ததுமே கண் எறியுது! – ஆதங்கத்தை கொட்டிய கேப்டன்!
, புதன், 30 அக்டோபர் 2019 (17:58 IST)
தலைநகர் டெல்லி புழுதியில் மூழ்கிவிட்டிருப்பதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் இந்திய கால்பந்து அணியின் கேப்டன்.

டெல்லியில் புகை மற்றும் தூசியினால் காற்று மிகுதியான மாசுபாடு அடைந்துள்ளது. எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத வண்ணம் சாலைகள் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி “டெல்லிக்குள் நுழைந்தாலே கண் எறிய தொடங்கி விடுகிறது. சில வெளிநாட்டு வீரர்கள் முகமூடிகளை அணிந்து கொள்கிறார்கள். தீபாவளிக்கு கூட மக்கள் யாரும் டெல்லியில் தங்குவதில்லை. இந்த பிரச்சினையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தீர்வு காண முடியும்” என கூறியுள்ளார்.

சுனிலின் இந்த கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாளுக்குநாள் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகமாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என இயற்கை ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரவு – பகல் ஆட்டம்; ஓகே சொன்ன வங்கதேசம் – குஷியில் இந்தியா!