Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒருநாள் முதல்வர் போல.. ஒருநாள் கமிஷனர் ஆன ரம்யா! – உருக வைக்கும் காரணம்

Advertiesment
ஒருநாள் முதல்வர் போல.. ஒருநாள் கமிஷனர் ஆன ரம்யா! – உருக வைக்கும் காரணம்
, புதன், 30 அக்டோபர் 2019 (17:21 IST)
தெலுங்கானாவில் 17 வயது சிறுமி ஒருவர் ஒருநாள் போலீஸ் கமிஷனராக பதவியேற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்த ரம்யா என்ற 17 வயது சிறுமி பல நாட்களாக ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது போலீஸ் கமிஷனர் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவரை ஒருநாள் போலீஸ் கமிஷனராக பதவியேற்க செய்து பெருமைப்படுத்தியுள்ளது தெலுங்கானா அரசு.

காவலர்களின் காக்கி சீருடை அணிந்து கமிஷனர் இருக்கையில் அமர்ந்து பணி இணைதல் கோப்பில் கையெழுத்திட்டார் ரம்யா. தொடர்ந்து பெண்கள் பாதுகாப்புக்கு காவலர்கள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்தால் ஏவுகணைதான்! – மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர்