புலிகளை காப்பது குறித்தான விழிப்புணர்வுக்காக மோட்டார் பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய தொடங்கியுள்ளனர் கொல்கத்தாவைச் சேர்ந்த தம்பதியினர்.
கொல்கத்தாவை சேர்ந்த ரதீந்திர தாஸ் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலி ஆகியோர் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் 5 யூனியன் பிரதேசங்கள் ஆகியவைகளுக்கு மோட்டார் பைக்கில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர். புலிகளை காப்பது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம்.
அந்த தம்பதியர்கள் மேற்கு வங்கத்திலுள்ள புலிகள் காப்பகத்திலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி பயணத்தை ஆரம்பித்து, ஒவ்வொறு மாநிலங்களிலும் உள்ள புலிகள் சரணாலயத்திற்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த சுற்றுப்பயணத்திற்கு “ஜார்னி ஃபார் டைகர்” என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ஒடிஷாவுக்கு வந்திருந்த தம்பதிகளை அங்கிருந்தவர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும் அத்தம்பதியினர் அங்கிருந்தவர்களிடம் புலிகள் காப்பது குறித்து சிறிது நேரம் உறையாடியது குறிப்பிடத்தக்கது.