Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் – ஆரம்பித்தது 2 ஆவது ஒருநாள் போட்டி !

Advertiesment
இந்தியா
, சனி, 26 ஜனவரி 2019 (07:31 IST)
இந்தியா நியுசிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் பிடிக்க தீர்மானித்துள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அதே வேகத்தோடு நியுசிலாந்து சென்று அங்கும் வெற்றியோடு கணக்கை ஆரம்பித்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி நியுசிலாந்தை 157 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.

அதையடுத்து இன்று தொடங்கவுள்ள இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. முதல் போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களோடு இந்த போட்டியிலும் இந்தியா களமிறங்க இருக்கிறது. நியுசிலாந்தில் சாண்ட்னர் மற்றும் சவுத்தி நீக்கப்பட்டு சோதி மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி
விராட் கோலி(கே), ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், அம்பாத்தி ராயுடு, எம்.எஸ். தோனி, கேதார் ஜாதவ், விஜய் ஷங்கர், சஹால், குல்தீப் யாதவ், புவனேஷவர் குமார், ஷமி

நியுசிலாந்து அணி
மார்ட்டின் குப்தில், காலின் மன்ரோ, கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டிம் லாதம், ஹென்றி நிக்கோல்ஸ், காலின் டி கிராண்ட்ஹோம், பிரேஸ்வெல்,சோதி, பெர்ஹுசன், ட்ரண்ட் போல்ட்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்கியது இடைக்காலத் தடை – நியுசிலாந்து பறக்கிறார் ஹர்திக் பாண்ட்யா !