Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ன பண்ணாலும் ஆட்சிக்கு வராது: பாஜகவிற்கு ஆப்பு...

Advertiesment
என்ன பண்ணாலும் ஆட்சிக்கு வராது: பாஜகவிற்கு ஆப்பு...
, வியாழன், 24 ஜனவரி 2019 (21:18 IST)
இந்தியா டுடே டிவி சேனல் மற்றும் கார்வி இன்சைட்ஸ் இணைந்து தேசத்தின் மனநிலை (#MoodOfTheNation) என்ற பெயரில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தினர். இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 
 
கருத்து கணிப்பில் வெளியான சில கவனிக்கப்பட வேண்டிய அமசங்கள்:
 
1. தேசிய ஜனநாயக கூட்டணி 2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 336 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை 257 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடியும். 
 
2. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்தமுறை 59 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. ஆனால் இம்முறை புதிதாக ஒருங்கிணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் சேர்த்து பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை தொடக்கூடும்.
 
3. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் அனைவரும் இணைந்து சுமார் 14 தொகுதிகளை வெல்லக்கூடும். இதில் ஒரு எம்பி பலம் குறைவாக இருந்தாலும், பெரும்பான்மையை இழந்துவிடும். 
 
4. 14 தொகுதிகளை கைப்பற்ற கூடிய பிற கட்சிகள் என்பது அதிமுக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள். 
 
5. மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகியவை தலா 44% வாக்குகளை பெறக்கூடும். பிறர் 12% வாக்குகளை பெறக்கூடும்.
 
6. தொகுதிகள் என்று வரும்போது தேசிய ஜனநாயக கூட்டணி 257 தொகுதிகளிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 272 தொகுதிகளையும் கைப்பற்றும்.
 
குறிப்பு: பெரும்பான்மைக்கு 272 எம்பிக்கள் தேவை  என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

70 வது குடியரசு தினம் .. தேசம் நமக்கு சொல்வது என்ன..?