Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 8 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா.. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுக்கள்..

Mahendran
வியாழன், 24 ஜூலை 2025 (18:31 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி சற்றுமுன் எட்டு விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்துள்ளது. இதில் 110வது ஓவரில் மட்டும் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெயஸ்வால் 58 ரன்களும், கே.எல். ராகுல் 46 ரன்களும் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். இதன்பிறகு, சாய் சுதர்சன் 61 ரன்கள் எடுத்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
 
கேப்டன் கில் 12 ரன்களில் அவுட் ஆனாலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்து தற்போது வரை அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார். வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் ஏமாற்றினாலும், ரிஷப் பண்ட் மட்டுமே தற்போது இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார்.
 
இங்கிலாந்து தரப்பில், பென் ஸ்டோக்ஸ் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
 
இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து வரும் நிலையில், ரிஷப் பண்ட் மற்றும் அவருடன் களத்தில் உள்ள சிராஜ்,  கூட்டணி எவ்வளவு ரன்களை சேர்க்கும் என்பது போட்டியின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக இருக்கும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 8 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா.. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுக்கள்..

காயம்பட்ட சிங்கம்.. ரிஷப் பண்ட் காயத்தோடு விளையாடுவார்! - பிசிசிஐ அறிவிப்பு!

நான்காவது டெஸ்ட்டில் இருந்து வெளியேறுகிறாரா ரிஷப் பண்ட்?

விளையாட்டு முன்னே சென்றுவிடும்…நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்- ஹர்பஜன் சிங் சூசக கருத்து!

U-19 டெஸ்ட் தொடர்.. அதிவேக சதம் அடித்து சாதனை செய்த ஆயுஷ் மகாத்ரே

அடுத்த கட்டுரையில்
Show comments