Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகக் கோப்பை: கபில்தேவ், தோனி வரிசையில் கோலி இடம்பிடிப்பாரா?

Advertiesment
உலகக் கோப்பை: கபில்தேவ், தோனி வரிசையில் கோலி இடம்பிடிப்பாரா?
, புதன், 17 ஏப்ரல் 2019 (15:41 IST)
இந்தியாவில் இது தேர்தல் காலமாக இருப்பதால் நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் தேர்தலை நோக்கியே இருந்து வருகிறது. ஆனால், ஓரிரு விதிவிலக்குகள் உண்டு. அப்படிப்பட்ட ஒன்றுதான் உலக கோப்பை. 
 
தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டிகளுக்கு அதிக அளவு ஆதரவு இருந்தபோதிலும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை என்பது தனிக்கவனம் பெறும் ஒன்றாக இருந்துவருகிறது.
 
பிரிட்டனில் வரும் மே 30 முதல் ஜுலை 14 வரை நடைபெறவுள்ள 12 வது (ஒருநாள் கிரிக்கெட்) உலகக் கோப்பையில் விளையாட விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், தோனி, ஷமி, புவனேஸ்வர் குமார், பும்ரா, கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா, சாஹல், ஜடேஜா ஆகியோர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
webdunia
வெல்லுமா கோலியின் படை?
இந்திய அணியின் தேர்வு மற்றும் சாதக பாதகங்கள் குறித்து பார்க்கையில், நிச்சயம் உலகக் கோப்பையயை வெல்ல நல்ல வாய்ப்புள்ள அணிதான் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இளம் வீரர் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என நல்ல கலவையாக உள்ளது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
இதுவரை இந்தியா வென்ற இரண்டு உலகக் கோப்பைகளில் (1983, 2011) அணிக்கு தலைமையேற்ற கேப்டன்களுக்கு குறிப்பிடத்தக்க பங்குண்டு. யாருமே எதிர்பாராத ஓரு அணியை உலக சாம்பியனாக ஆக்க 1983-ல் கபில்தேவின் தன்னம்பிக்கையும், பேட்டிங், பந்துவீச்சு என ஆட்ட பங்களிப்பும் பெரும் காரணமாக அமைந்தன.
webdunia
அதேபோல் 2011-ல் இக்கட்டான தருணங்களில் தானே முன்னின்று வழிநடத்திய தோனியின் தலைமைப்பண்பு அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தது. அதேபோல் விராட் கோலி மீதும் தற்போது அந்த எதிர்பார்ப்பு வந்துள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். அதேபோல், 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடிய ரவிசாஸ்திரி தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பது விராட் கோலிக்கும், அணிக்கும் உதவிகரமாக இருக்கும் என நம்பபடுகிறது. 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரையில் மின்சாரத்தை நிறுத்தி ஓட்டுக்குப் பணம் – திமுகவினர் குற்றச்சாட்டு !