Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய அணி வெற்றியால் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட சோதனை !

இந்திய அணி வெற்றியால் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட சோதனை !
, புதன், 27 ஜனவரி 2021 (19:35 IST)
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி, பிரிஸ்பேனில் நடந்து முடிந்த பரபரப்பான டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று ‘’பார்டர் கவாஸ்கர் கோப்பை’’யை இரண்டாவது முறையாக வென்றது.

கடந்த 32 ஆண்டுகளாக பிரிஸ்பென் காபா மைதானத்தில் தோல்வி அடையாத ஆஸ்திரேலியாவை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், சுப்மன் கில்,உள்ளிட்டோர் மிக முக்கியமானக் காரணமாக அமைந்தனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரைவென்ற முன்னணி வீரர்கள் இல்லாத இந்திய அணிக்கு  இந்தியாவிலுள்ள தலைவர்கள்ட், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும்  வாழ்த்து தெரிவித்தனர்.

அதே சமயம் கிரிக்கெட்டில் ஜாம்பாவானாகத் திகழும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இழந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி கேள்வியை எழுப்பியது.

இந்நிலையில்,  தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம் ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா அணி அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் 5 புதுமுக வீரர்களை களமிறக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

33 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தாலும் சுதாரித்த பாகிஸ்தான்: பவத் அலாம் சதம்!