Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

33 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தாலும் சுதாரித்த பாகிஸ்தான்: பவத் அலாம் சதம்!

Advertiesment
33 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தாலும் சுதாரித்த பாகிஸ்தான்: பவத் அலாம் சதம்!
, புதன், 27 ஜனவரி 2021 (17:07 IST)
33 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தாலும் சுதாரித்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே கராச்சியில் நேற்று முதல் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 220 ரன்களில் ஆல்-அவுட் ஆனது 
 
இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்தது. இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் பாகிஸ்தான் அணியின் பவத் அலாம் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 224 பந்துகளில் சதமடித்தார் என்பதும் இதில் 2 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
தற்போது பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில் 46 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்ட பவத் அலாமுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் கங்குலிக்கு நெஞ்சு வலி! – மருத்துவமனையில் அனுமதி!