Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆன இந்தியா… நூலிழையில் சத வாய்ப்பை இழந்த சுந்தர்!

முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆன இந்தியா… நூலிழையில் சத வாய்ப்பை இழந்த சுந்தர்!
, சனி, 6 மார்ச் 2021 (11:30 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது, இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா (49) நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பண்ட் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டனர். 

ண்ட்  அதிரடியாக 118 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து ஆண்டர்சன் பந்தில் ரூட் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் சேர்த்துள்ளது. வாசிங்க்டன் சுந்தர் 60 ரன்களுடனும் அக்ஸர் படேல் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 89 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.

இதையடுத்து இன்று முன்றாம் நாள் ஆட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விக்கெட்டை இழக்காமல் இந்திய வீர்ரகளான சுந்தர் மற்றும் அக்ஸர் சிறப்பாக விளையாடினர். ஆனால் ஒரு கட்டத்தில் அக்ஸர் படேல் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதன் பின்னர் வந்த வீரர்கள் விரைவாக அவுட் ஆகினர். இறுதியில் இந்தியா 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.  இந்திய அணியின் சுந்தர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 96 ரன்கள் சேர்த்தார். அவரின் முதல் சதம் அடிக்கும் வாய்ப்பு நூலிழையில் மிஸ்ஸனது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 160 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்றாவது நாளில் சிறப்பான தொடக்கம்… சதமடிப்பாரா சுந்தர்?