Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதம் மழை பொழிந்த இந்தியா; 610 ரன்களுக்கு டிக்ளேர்

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2017 (16:09 IST)
முரளி விஜய், புஜாரா, கோலி, ரோகித் சர்மா என தொடர்ந்து இரண்டு நாட்களாக சதம் மழை பொழிந்த இந்திய அணி 610 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.


 
இலங்கை இந்தியா அணிகள் இடையே நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாளிலே 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இரண்டு நாட்கள் விளையாடியது. போட்டியின் மூன்றாவது நாளான இன்று 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்துள்ளது.
 
இதையடுத்து இலங்கை அணி தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. இந்திய அணி 405 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தொடக்க வீரராக களமிறங்கிய முரளி விஜய், புஜாரா ஆகியோர் சதம் விளாசினர். இன்று கோலி இரட்டை சதம் அடித்தார். அவரைத்தொடர்ந்து ரோகித் சர்மாவும் தனது பங்குக்கு சதம் விளாசினார்.
 
இந்திய அணியில் மூன்று சதம் மற்றும் ஒரு இரட்டை சதம். இப்படி சதம் மழை பொழிந்த இந்திய அணிக்கு இன்னிங்ஸை வெற்றிப்பெற அதிகளவில் வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மண்ணில் விளையாடுவதால் அழுத்தம் இருக்கும்… ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் பதில்!

முதல் டெஸ்ட்டில் நிதீஷ் குமாருக்கு வாய்ப்பு… பவுலிங் பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 3-வது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா..!

கோலியைக் கொண்டாடும் ஆஸி ஊடகங்கள்.. ஆனால் உளவியல் ரீதியாகத் தாக்கும் ஆஸி வீரர்கள்…!

அவர் இருந்திருந்தா நாங்க எல்லாம் களைப்பாகிவிடுவோம்… இந்திய வீரர் குறித்து நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸி பவுலர்!

அடுத்த கட்டுரையில்
Show comments