Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாக்பூர் டெஸ்ட்: இலங்கையை அடித்து துவைத்து இந்திய அணி முன்னிலை!!

நாக்பூர் டெஸ்ட்: இலங்கையை அடித்து துவைத்து இந்திய அணி முன்னிலை!!
, சனி, 25 நவம்பர் 2017 (19:37 IST)
இந்தியா - இலங்கை இடையேயான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. 
 
இந்திய அனி வீரர்க்ளின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது. பின்னர் இந்திய அணி களமிரங்கியது. 
 
நேற்றைய போட்டியின் முடிவில் இந்தியா 8 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய், புஜாரா ஆகியோர் தலா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இன்று 2 வது நாள் ஆட்டம் தொடக்கம் முதல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முரளி விஜய் சதமடித்தார். இவரது சதத்தால் இந்திய அணி 2 வது நாள் தேனீர் இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. 
 
முரளி விஜய் 106 ரன்னுடனும், புஜாரா 71 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இடைவேளை முடிந்ததும் விஜய் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். 221 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 128 ரன்கள் குவித்து ஹெராத் பந்தில் ஆட்டம் இழந்தார். 
 
அடுத்து புஜாராவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். புஜாரா 246 பந்தில் 11 பவுண்டரியுடன் சதம் அடித்தார். இருவரும் 2 வது நாள் ஆட்டம் முடியும் வரை நின்று விளையாடினார்கள். 
 
இந்தியா 2 வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 121 ரன்களுடனும், விராட் கோலி 54 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி