நாக்பூர் டெஸ்ட்.. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை செய்துள்ளது.
பிப்ரவரி ஒன்பதாம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை 177 ரன்கள் அடித்த நிலையில் இரண்டாவது இன்னிங்செல் வெறும் 91 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 400 ரன்கள் எடுத்திருந்ததால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் ஜடேஜா முதல் இன்னிங்ஸ் 5 விக்கெட் களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.