முதல் டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்தியா 400 ரன்களுக்கு ஆல் அவுட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிகெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது.
இந்த போட்டி கடந்த 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 177 ரன்கள் மட்டுமே அடித்தது என்பதும் இந்தியாவின் ஜடேஜா மிக அபாரமாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மாவின் அபார சதம் மற்றும் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேலின் அதிரடி ஆட்டம் காரணமாக இந்தியா 400 ரன்கள் எடுத்து தற்போது 223 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது