டிஆர்எஸ் மற்றும் இன்பாக்ட் பிளேயர் விதிமுறைகள் டிஎன்பிஎல் போட்டிகளிலும் அறிமுகம் செய்யப்படும் என டிஎன்பிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் போட்டிகளில் இன்பாக்ட் பிளேயர் என்பது அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் இது போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்தது என்பதையும் பார்த்தோம்.
பில்டிங் செய்யும் போது ஒரு பந்துவீச்சாளரை பயன்படுத்திக்கொண்டு அதன் பிறகு பேட்டிங் செய்யும்போது ஒரு இம்பேக்ட் பிளேயராக பேட்ஸ்மேனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது மிகப்பெரிய சாதகமான அம்சமாகும்.
அந்த வகையில் இந்த வசதியை டிஎன்பிஎல் போட்டிகளிலும் வருங்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என டிஎன்பிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் மழை வந்து ஆட்டம் தடைபட்டால் டிஆர்எஸ் முறையும் இனி டிஎன்பிஎல் போட்டிகளில் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.