Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் இறுதிப் போட்டி: ஜியோ சினிமா செயலி உலக சாதனை

jio cinema
, செவ்வாய், 30 மே 2023 (14:55 IST)
ஜியோ சினிமா செயலியில் ஐபிஎல் -2023 , 16 வது சீசன் இறுதிப் போட்டியை சுமார் 3.2 கோடி பேர் பார்த்துள்ளனர்.

ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் போட்டி  நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள  நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டைன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

இதில், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   5வது முறையாக வென்றது.

இந்த நிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டி மூலம் புதிய உலக சாதனை படைத்துள்ளதாக ஜியோ சினிமா கூறியுள்ளது. அதன்படி,   நேற்று, திரில்லிங்காக நடைபெற்ற இப்போட்டியை ஜியோ சினிமா செயலிலில் டாடா ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியை சுமார் 3.2 கோடிப் பேர் பார்த்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாய நிலத்தில் தரையிறங்கிய பயிற்சி விமானம்...விமானிகள் காயம்