Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விதிகள் மாற்றம்: ஐசிசி அறிவிப்பு..!

Advertiesment
cricket

Siva

, ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (08:08 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வர   ஐசிசி திட்டமிட்டுள்ளது.
 
டபிள்யுடிசி தொடரில் புள்ளிகள் வழங்கும் முறை மாற்றப்பட உள்ளது. எதிர்கால போட்டிகளில் வெற்றியின் வித்தியாசம் மற்றும் வெளிநாட்டு மைதானங்களில் பெறப்படும் வெற்றியைப் பொருத்து கூடுதல் புள்ளிகள் வழங்கும் முறையை ஐசிசி பரிசீலிக்கிறது. ரக்பி போட்டிகளில் உள்ள  அமைப்பை பின்பற்றி, போட்டியின் தரம் மற்றும் எதிரணியின் வலிமை என்பவற்றையும் கணக்கில் எடுக்கலாம் என கூறப்படுகிறது.
 
தற்போதைய நடைமுறையில், வெற்றிக்கு 12 புள்ளிகள் வழங்கப்படுகிறது. இதனால் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அதிகப்படியான ஆதிக்கம் கிடைக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வாரம் ஜிம்பாப்வேயில் நடைபெறும் ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும்.
 
இதேவேளை, ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளை பயன்படுத்தும் முறை மாற்றப்பட உள்ளது. பந்துகள் பழுதுபடாமல் இருக்கதால், ரிவர்ஸ் ஸ்விங் காணப்படாமல் பவுலர்கள் ஏமாற்றமடைவதாக கூறப்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் ஒரே ஒரு வெள்ளை பந்தே பயன்படுத்தப்படும்.
 
அதேபோல், யு-19 உலகக் கோப்பை 50 ஓவர் வடிவத்திலிருந்து 20 ஓவர்களுக்கு குறைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக்.. பஞ்சாப் பவுலர்களை சிதறடைத்து அபார சதம்..!