இந்தியப் பெண்ணை மணந்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் !

புதன், 21 ஆகஸ்ட் 2019 (18:11 IST)
இந்தியாவை சேர்ந்த பெண்ணை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி மணந்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்திய பெண்ணான ஷமியாவை துபாயில் இன்று திருமனம் செய்துள்ளார். மணப்பெண்ணான ஷமியா ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் . இங்கிலாந்தில் பொறியியல் படித்த அவர் தனியார் விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஷாமியா பெற்றோரோடு துபாயில் வசித்து வருகிறார்.

துபாயில் நடந்த இந்த திருமணத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தன் காதலியை மணந்த நியூஸிலாந்து கேப்டன் கர்ப்பம்? – குழப்பத்தில் ரசிகர்கள்